டாஸ்மாக்கை திறந்தது தமிழக அரசுக்கு அவப்பெயர் தான் -விஜயகாந்த்

Published by
Venu

தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மது நமக்கு தேவைதானா? என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா என்ற வைரஸ் உலுக்கி வருகிறது.எனவே வைரஸை தடுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில்ஓன்று தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் இந்தியாவில் மளிகை மற்றும் காய்கறி கடைகளை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.3 -வது ஊரடங்கு சமயத்தில் தான் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது.இந்த சமயத்தில் தான் ஒரு சில மாநிலங்கள் டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்தது.சுமார் 30 நாட்களுக்கு மேலாக மது அருந்தாமல் இருந்த மதுபிரியர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியாகவே அமைந்தது என்று கூறலாம்.ஆந்திரா,டெல்லி,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மது வாங்குவதற்கு காலை முதலே மதுபிரியர்கள் கூட்டம் கூடடமாக வந்து மது வாங்கி சென்றனர்.இது பெரும் விவாதத்தை கிளப்பியது .அதாவது இதனால் சமூக இடைவெளி பாதிக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்குஇடையில் தான் தமிழக அரசு சென்னை மற்றும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை தவிர பிற இடங்களில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்தது.இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டியதன் அவசியம் என்ன ? என்று  தமிழக அரசுக்கு விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மது நமக்கு தேவைதானா? என்றும் கடந்த 43 நாட்களாக ஊரடங்கை சிறப்பாக நடைமுறைப்படுத்திய தமிழக அரசுக்கு டாஸ்மாக் கடைகள் திறப்பின் மூலம் அவப்பெயரே கிடைக்கும் என்பதால், தமிழகத்தில் மதுக் கடைகளை மூட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

9 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

9 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

9 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

12 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

12 hours ago