நாளை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் விஜயகாந்த் உடல்..!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் அஞ்சலிக்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல் நாளை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுகிறது. இதுகுறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று (28.12.2023) காலை 6.10 மணியளவில் மறைவு என்ற செய்தி தேமுதிகவிற்கும், திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழக மக்களுக்கும் பேரிழப்பாகும்.

கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை 29.12.2023 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து மதியம் 1.00 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது.

கேப்டன் அவர்களின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலிருந்து மதியம் 1.00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
Vijay
TVK Leader Vijay speech in parandur
s.regupathy eps
tvk vijay
TVK Leader Vijay visit Parandur
muthukumaran bigg boss