விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாதக சார்பில் அபிநயா போட்டி – சீமான் அறிவிப்பு!

Published by
பால முருகன்

விக்கிரவாண்டி : தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் முடிந்து இருக்கும் நிலையில், அடுத்ததாக வரும் ஜூலை மாதம் 10 -ஆம் தேதி தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இடைதேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக யார் போட்டியிட போகிறார் என்பதனை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியீட்டு இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது ” வருகின்ற ஜூலை 10 அன்று, தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா (இளங்கலை சித்த மருத்துவம் B.H.M.S., MD) அவர்கள் போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என சீமான் தெரிவித்துள்ளார்.

மேலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட இருக்கும் மருத்துவர் அபிநயா நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு 65,000 வாக்குகள் பெற்று 4வது இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

PBKS vs DC: ஆறுதல் வெற்றியுடன் தொடரை முடிக்குமா டெல்லி.? இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியுடன் மோதல்.!

ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்த…

2 minutes ago

நிதி ஆயோக் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு.., மம்தா, சித்தராமையா பங்கேற்கவில்லை.!

டெல்லி : மத்திய அமைச்சரவை மூலம் கடந்த 2015, ஜனவரி 1-ல் உருவானது தான் நிதி ஆயோக். தேச வளர்ச்சி,…

48 minutes ago

”கீழடி ஆய்வறிக்கையில் திருத்தம் தேவையில்லை” – தொல்லியல் ஆய்வாளர்.!

சென்னை : கீழடி, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இங்கு 2014-15 முதல் மத்திய தொல்லியல்…

1 hour ago

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., எங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்?

சென்னை : அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…

2 hours ago

ஆல் – அவுட்: மளமளவென சரிந்த விக்கெட்ஸ்.., ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்! ஹைதராபாத் மாஸ் வெற்றி.!!

லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…

12 hours ago

தவெக-வின் பொதுச் செயலாளர் ஆகிறார் IRS அதிகாரி அருண்ராஜ்.?

சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…

12 hours ago