விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமை சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி விசாரணையை தொடங்கினார்.
விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்து மிரட்டி வந்துள்ளார். ஹரிஹரன் அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாக கூறி அவரது நண்பர்கள் அப்பெண்ணை பலமுறை வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர், ஹரிஹரன் உட்பட 8 பேர் மீது அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஹரிஹரன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். நேற்று முன்தினம் சட்டபேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என அறிவித்தார்.
இதைதொடர்ந்து, நேற்று விருதுநகரில் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமை சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி விசாரணையை தொடங்கினார்.
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…
மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…