ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கி வந்த தண்ணீர் நிறுத்தம்..!

ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கி வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் தேவை ஏற்பட்டது. இதனால் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. பின்னர், ஸ்டெர்லைட் ஆலை மூன்று மாதம் அதாவது ஜூலை 31ம் தேதி வரை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
நீதிமன்றம் உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில், இன்று காலை ஆலைக்கு வழங்குவதற்கான தண்ணீரை அரசு நிறுத்தியுள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்த அரசு நேற்று உத்தரவை தொடர்ந்து பணியாளர்கள் வெளியேறினர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025