விவாதத்திற்கு நாங்கள் தயார், அமைச்சர் பொன்முடி தயாரா? – அண்ணாமலை சவால்

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என அண்ணாமலை அறிக்கை.

மும்மொழி கொள்கையின் அவசியம் குறித்து விவாதம் நடத்த நான் தயார், அமைச்சர் பொன்முடி தயாரா? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறாரா அண்ணாமலை என்று கேட்டிருக்கிறார் அமைச்சர்.

என்னைப் பொறுத்தவரையில், என் மகன் படிக்கும் பள்ளியில் மூன்று மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இருபது வயதில், அவர் ஐந்து மொழிகள் கற்றிருக்க வேண்டும் என்பதே என் ஆசை. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், இதே போல பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

உலகத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க, நம் குழந்தைகள் பல மொழிகள் கற்றுத் தெரிவது நலம். திமுக முதல் குடும்பத்தினரும், மற்ற திமுகவினரும் நடத்தும் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கையா கடைபிடிக்கப்படுகிறது? பணமிருந்தால் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.

பணமில்லாத ஏழை எளிய மக்களுக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கக் கூடாது என்று நினைக்கும் நீங்கள் எங்களுக்குப் பாடம் நடத்த வேண்டாம். மூன்று மொழிகள் என்றால் ஹிந்தி கட்டாயம் என்ற திசை திருப்பலை திமுகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையின் கீழ், மும்மொழிக் கற்றலில் ஹிந்தி கட்டாயம் இல்லை.

ஆனால் தாய்மொழி கற்பது கட்டாயம். இத்தனை ஆண்டுகளில் முதன்முறையாக தாய்மொழி கற்பது கட்டாயமாக்கப்பட்டிருப்பது புதிய கல்வி கொள்கையில்தான். இதனால் உங்களால் மறுக்க முடியுமா? கேள்வி எழுப்பியுள்ளார். மும்மொழி கொள்கையின் அவசியம் குறித்து விவாதம் நடத்த நான் தயார். நீங்கள் தயாரா? என அமைச்சர் பொன்முடிக்கு சவால் விடுத்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பிறந்த நாள் கொண்டாடிய தோனி…சொத்து மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…

5 hours ago

ராமதாஸுக்கு போட்டியாக நாளை நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்தும் அன்புமணி!

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

6 hours ago

கூட்டத்தை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஜுரம் வரலாம் – எடப்பாடி பழனிசாமி சாடல்!

கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…

7 hours ago

லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…

7 hours ago

முருகன் கோயில் குடமுழுக்கு..”என்னை அனுமதிக்கவில்லை”… செல்வப்பெருந்தகை வேதனை!

காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…

8 hours ago

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…

9 hours ago