bussy anand and vijay [file image]
த.வெ.க : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்தார். இதனையடுத்து, கட்சியின் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் அடிக்கடி ஆலோசனை கூட்டமும் நடைபெற்று வருகிறது.
வரும் ஜூன் 22-ஆம் தேதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற இருப்பதாக ஏற்கனவே தகவலும் வெளியாகி இருந்தது. இதனையடுத்து, இன்று ஈரோட்டில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற புஸ்ஸி ஆனந்த் மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாக தகவலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புஸ்ஸி ஆனந்த் ” எங்கள் தலைவர் விஜய் அவர்கள் அறிக்கையில் எங்களுடைய இலக்கு 2026 என்று தெளிவாக குறிப்பிட்டு இருந்தார். எனவே, எங்களுடைய இலக்கு 2026 சட்ட மன்ற தேர்தல் தான். எங்களுடைய கட்சியில் எடுக்கப்படும் எல்லா முக்கியமான முடிவுகள் பற்றி எங்களுடைய தலைவர் தான் அறிவிப்பார். எல்லா முடிவும் எங்களுடைய தலைவருடையது தான்.
இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது. எனவே, எதுவாக இருந்தாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் தான் அறிவிப்பார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடுக்கான இடத்தைத் தேர்வு செய்துகொண்டிருக்கிறோம். தேர்வு செய்து முடித்து தலைவர் விஜய் அனுமதி பெற்ற பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” எனவும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…