சென்னையை தவிர பிற மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள்.? – தமிழக அரசு அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு ஜூன் 30 ஆம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசின் அறிவித்து, அதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. 

சென்னையை தவிர பிற மாவட்டங்களுக்கான தளர்வுகள் :

தொழில் நிறுவனங்கள், அனைத்து தனியார் நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. என்னினும் இயன்ற வரை வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. வணிக வளாகங்கள் தவிர்த்து பெரிய நகைக்கடை, ஜவுளிக்கடை போன்றவை 50% பணியாளர்களுடன் செயல்படலாம். கடைகளில் குளிர்சாதன இயந்திரங்களை இயக்கக்கூடாது என்று தமிழக  அரசு தெரிவித்துள்ளது. டீ கடைகள், உணவு விடுதிகளில் ஜூன் 8 ஆம் தேதி முதல் அமர்ந்து உணவு அருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஹோட்டல், டீ கடைகளில் மொத்தம் இருக்கைகளில் 50% இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், வாடகை கார்கள் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளுடன் இயங்கலாம் என்றும் ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டுப்பாட்டு பகுதிகளில் எவ்வித தளர்வுகளும் கிடையாது என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் 8 மண்டலங்களில் 7 வது மண்டலமான (காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு), 8 வது மண்டலமான ( சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி) ஆகிய மண்டலங்களை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் நாளை முதல் பொதுப்போக்குவரத்து சேவை 50 சதவீத பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

57 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

1 hour ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

8 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

10 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

11 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

12 hours ago