திருச்சி மாவட்டம் பாலக்கரையில் உள்ள காஜாபேட்டை புது தெருவை சேர்ந்தவர் அல்போன்ஸ்ராஜ் ஆவார்.இவர் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் சிறுவயதிலேயே ஆபாச படங்களில் அதிகம் ஆர்வம் காட்டி வந்துள்ளார்.
இவருக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகியும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஆபாச படங்களை பார்த்துள்ளார்.அதில் குறிப்பாக குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை விரும்பி பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நாகர்கோவிலில் தனியாக தங்கி வேலை பார்த்து வந்த இவர் பின்னர் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு முகநூலில் வெவ்வேறு பெயர்களில் கணக்குகளை தொடக்கி ஆபாச படங்களை பதிவு செய்து வந்துள்ளார்.
மேலும் பேஸ்புக், மெசஞ்சர் மூலம் குழுக்களை உருவாக்கி நூற்றுக்கும் மேற்பட்ட நபருக்கு ஆபாச படங்களை அனுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.மேலும் வாட்ஸ் அப்பில் குழுக்களை உருவாக்கி அதிலும் ஆபாச படங்களை பகிர்ந்துள்ளார்.
இதன் காரணமாக இவரை கைது செய்த கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறை அதிகாரிகள் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அவரது செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆபாசப் படங்களை கைப்பற்றியுள்ளனர்.
பின்னர் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் அவரது செல்போனில் வெவ்வேறு குழுக்களில் ஆபாச படங்களை பகிர்ந்து வந்தவர்கள் பட்டியலில் சென்னை முதலிடம் பெற்றுள்ளது.
இதன் காரணமாக அடுத்த நடவடிக்கை சென்னைவாசிகள் மீது பாய வாய்ப்புள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…