தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தேமுதிக கடந்த மக்களவை தேர்தலில் இருந்து அதிமுக கூட்டணியில் இருந்து வருகிறது. ஆனால் வருகின்ற சட்டசபைத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்வி எழுந்து வருகின்றது.
இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில் , தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக இருக்கிறது.ஜனவரி மாதம் தேமுதிகவின் பொதுக்குழு, செயற்குழு நடந்த பிறகு சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று கூறினார்.இந்நிலையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.மேலும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா ,துணை செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.இந்த கூட்டத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…