பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
மாற்றமில்லை:
எனினும்,கடந்த நான்கரை மாதங்களுக்கும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
விலை உயர்வு:
இதனையடுத்து,137 நாட்களுக்கு பிறகு சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.102.16-க்கும், அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலையும் 76 காசுகள் அதிகரித்து ரூ.92.19-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மீண்டும் அதிகரிப்பு:
பின்னர்,நேற்றும் பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி,சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் அதிகரித்து ரூ.102.91-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலையும் 76 காசுகள் அதிகரித்து ரூ.92.95-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதிர்ச்சி:
உக்ரைன்- ரஷ்யா போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில்,கடந்த இரண்டு நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 51 காசுகளும்,டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 52 காசுகள் அதிகரித்துள்ளது.இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இன்றைய நிலவரம்:
இந்நிலையில்,இரண்டாவது நாளாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.91-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் ரூ.92.95-க்கும் நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…