காவல்நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வந்த பெண் திடீர் மரணம்!

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணு மின் நிலையத்தில் வேலை செய்து வந்தவர் தான் கிறிஸ்டோபர். இவர் மீது, சென்ற மாதம் சிறுமியை பாலியல் துன்புறுத்தியதாக கூறி போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கிறிஸ்டோபர் இன்னும் பிடிபடவில்லை. அந்த புகாரின் பேரில் நெல்லை வள்ளியூர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது
இந்த வழக்கின் விசாரணையின் போது கிறிஸ்டோபர் போன் நம்பரில் இருந்து லீலாபாய் எனும் பெண்ணின் நம்பருக்கு அதிகமாக போன் பேசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆதலால் லீலாபாயை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது இரவு முழுவதும் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. இதில் லீலாபாய் உடல்நிலை மோசமாகியுள்ளது. பின்னர், அவர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் .
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025