கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு குடில் அமைத்த போது விபரீதம்!மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

- சாத்தான் குளத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில் அமைத்து கொண்டிருந்த இளைஞர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது.
- இதில் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் பெரியதாழை நடுத்தெருவை சேர்ந்தவர் கிளேட்டன் ஆவார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளன.மூத்த மகன் மரியடினாப் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் மரியடினாப் நேற்று தனது வீட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு குடில் அமைக்கும் பணியை செய்துள்ளார்.பின்னர் அங்குள்ள குடிலில் மின்விளக்கு அமைத்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.இதில் மரியடினாப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதன் காரணமாக தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர்.
பின்னர் மரியடினாப்பின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பின்னர் இதன் காரணமாக வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025