சீனாவில் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 11 பேர் பலி..!

சீனாவில் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் பல பகுதிகளில் இந்த வார இறுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் வடகிழக்கு சீனாவில் கிகிஹார் நகரில் உள்ள நடுநிலைப் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
உடற்பயிற்சி கூடத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் போது 19 பேர் உள்ளே இருந்ததாகவும், அதில் 4 பேர் தப்பி ஓடிய நிலையில் 15 பேர் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் மீட்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், பெர்லைட் எனப்படும் பெர்லைட் என்ற கனிமப் கட்டுமானப் பொருளை, மேற்கூரையில் வைத்து கட்டியது தெரிய வந்துள்ளது. அதிக நீரை உறிஞ்சும் இந்த கனிமம் மழை நீரில் நனைந்து எடைக் கூடியதால் கூரை இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
On July 23, the roof of a middle school gymnasium in Qiqihar City, Heilongjiang Province collapsed, causing many people to be trapped, and rescue is underway. #China Shi Shi #Chinanews #中国新闻 pic.twitter.com/PbpYW9edxu
— 包帝国韭菜馅 (@Colorfu33624983) July 23, 2023