173 பயணிகள்! நடுவானில் தீ பிடித்த ஏர்லைன்ஸ் விமானம்..! அவசரமாக தரையிறக்கம்!

Default Image

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென பறவைகள் மோதியதால் எஞ்சினில் தீப்பற்றியதால் பரபரப்பு.

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் இருந்து பீனிக்ஸ் நோக்கி சென்ற Boeing 737-800 அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, திடீரென பறவைகள் மோதியதால் எஞ்சினில் தீப்பற்றியது. இதனால், விமானம் அவசரமாக தரையிறப்பட்டதால் 173 பயணிகள் உயிர்தப்பினர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ்க்கு சொந்தமான Boeing 737-800 என்ற விமானம் புறப்பட்டு நடு வானில் சென்று கொண்டிருந்த போது, திடீரென விமானத்தில் பறவைகள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் விமானத்தின் வலது பக்க என்ஜினில் தீ பிடித்தது. இது குறித்த எச்சரிக்கையும் விமானிக்கு கிடைத்ததால், அருகில் இருந்த ஒஹியோ நகரத்தில் உள்ள ஜான் கிளென் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது.

நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது விமானம் எஞ்சினில் தீப்பற்றியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், விமானியின் சாதுரியம் காரணமாக விமானம்  தரையிறக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 173 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம் சிறிது நேரத்திற்குப் பிறக பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்