உலகளவில் கொரோனா பாதிப்பு 1 மாதத்தில் 80% அதிகரிப்பு.!

உலகளவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது 80 சதவீதம் உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
அதாவது, ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 6 வரை உலகளவில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் புதிய கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளது என்றும், இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 80 சதவீதம் அதிகம் என கூறப்படுகிறது. இருப்பினும், இறப்பு எண்ணிக்கை 57 சதவீதம் குறைந்து 2,500 ஆக உள்ளது.
இது புதிய வகை கொரோனா தொற்று EG.5 அல்லது “Eris” என அழைக்கப்படும் இந்த மாறுபாடு, XBB.1.9.2 எனப்படும் Omicron துணை வகையுடன் தொடர்புடையது. இந்த புதிய வகை கொரோனா தான் உலகம் முழுவதும் பரவி வருகிறதாம்.
WHO தகவலின்படி, இந்த கொரோனா தொற்றின் அதிக பாதிப்பு கொரியா, பிரேசில், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து பதிவாகியுள்ளன. பிரேசில், கொரியா, ரஷ்யா, பெரு மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.