imrankhan[Imagesoure : HT]
முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (இசிபி) ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளது
தேர்தல் ஆணையத்தை அவமதித்த வழக்கில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் ஃபவாத் சவுத்ரிக்கு எதிராக பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (இசிபி) ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட்களை பிறப்பித்துள்ளது. இம்ரான் கான் மற்றும் ஃபவாத் சவுத்ரி தனிப்பட்ட முறையில் சம்மன் அனுப்பப்பட்ட போதிலும் ECP முன் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக பிடிஐயின் பல தலைவர்கள் மீது அவமதிப்பு வழக்குகள் தொடங்கப்பட்டன. அவர்களுக்கு எதிராக பல நோட்டீஸ்கள் வழங்கப்பட்ட போதிலும், கட்சித் தலைவர்கள் ECP முன் ஆஜராகவில்லை.
இந்த நிலையில், ECP பல எச்சரிக்கைகளுக்கு பின், ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 70 வயதான கான், கடந்த ஆண்டு ஏப்ரலில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பல்வேறு நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகளை எதிர்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், கடந்த மே 9-ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பிடிஐ தலைவர் கான் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அன்று நாடு முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன. கானின் ஆதரவாளர்கள் லாகூர் கார்ப்ஸ் கமாண்டர் இல்லம், மியான்வாலி விமானப்படை தளம் மற்றும் பைசலாபாத்தில் உள்ள ஐஎஸ்ஐ கட்டிடம் உட்பட ஒரு டஜன் இராணுவ தளங்களை கானின் கைதுக்கு பதிலடியாக சேதப்படுத்தினர்.
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…