Woman Missing [file image]
ரஷ்யா : சோச்சியில், லிபெட்ஸ்க் நகருக்குச் சென்ற பெண் ஒருவர் ரிவேரா கடற்கரையில் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது காதலனுடன் குளிக்க ரிவேரா கடற்கரைக்கு வந்துள்ளார். அப்போது காதலனுடன் விளையாடி கொண்டு இருந்த நிலையில், திடீரென பெரிய அலையில் சிக்கினார்.
இருவரும் கையை பிடித்துக்கொண்டு முதலில் கடலுக்குள் சென்ற நிலையில், மெதுவாக கடலுக்குள் சென்றார்கள். அப்போது பெரிய அலை ஒன்று வரும் போது காதலன் காதலியை பத்திரமாக பிடித்துக்கொண்டு அலையை விட்டு வெளியே வந்தார். பிறகு மீண்டும் ஒரு பெரிய அலை இருவரையும் அடித்த நிலையில், காதலன் காதலியை விட்டு சற்று தூரம் கரைக்கு ஒதுங்கிவிட்டார்.
பின், அந்த காதலி தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்த நிலையில், காதலன் வேகமாக சென்று காதலியை மீட்க முயற்சி செய்தார். இருப்பினும் அலைகள் தொடர்ச்சியாக அடித்து கொண்டே இருந்த நிலையில், காதலி கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டார். காதலன் வேதனையுடன் காதலியை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை. இது தொடர்பான திகிலூட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து மீட்புப் படை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட, நிலையில் காணாமல் போன பெண்ணை இன்னும் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 3 நாட்கள் ஆகியும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும், ரிவேரா கடற்கரையில் இருந்து மாமாய்கா நுண் மாவட்டம் வரை தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…