Isreal Palastine War - White House Press Release [File Image]
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு போர் தொடுத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் 4வது நாளாக தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பு கட்டுப்பாட்டில் வைத்து இருந்த காசா பகுதியை கைப்பற்றி விட்டதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று அறிவித்தது.
இந்த போரில் இதுவரை இரு நாட்டை சேர்ந்தவர்களும் சுமார் 1600 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான மோதலில் உலக நாடுகளில் பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், சில நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
போரை நாங்கள் தொடங்கவில்லை…ஆனால் முடித்துவைப்போம் – ஹமாஸை எச்சரித்த இஸ்ரேல்!!
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனியின் அதிபர் ஷோல்ஸ், இத்தாலியின் பிரதமர் மெலோனி, இங்கிலாந்து பிரதமர் சுனக் மற்றும் அமெரிக்காவின் ஜனாதிபதி பிடன் ஆகியோர் இஸ்ரேலுக்கு ஒன்றுபட்ட ஆதரவை தெரிவிக்கிறோம். ஹமாஸ் படைகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அந்த கூட்டறிக்கையில், ஹமாஸின் பயங்கரவாதச் செயல்களுக்கு எந்தவித நியாயமும் இல்லை, உலகலாவிய கட்டுப்பாடுகளை மீறி ஹாமாஸ் செயல்படுகிறது. இது கண்டிக்கப்பட வேண்டிய செயல் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம். பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. கடந்த சில நாட்களாக ஹமாஸ் பயங்கரவாதிகள் பல குடும்பங்களைக் கொன்று குவித்ததும், ஒரு விழாவில் புகுந்து 200 இளைஞர்களைக் கொன்று குவிப்பதும், வயதான பெண்கள், குழந்தைகள் ஆகியோரை கடத்திச் சென்றதும் உலகளவில் அதிர்ச்சியூட்டும் சம்பவமாக அமைந்துள்ளது.
இத்தகைய அட்டூழியங்களுக்கு எதிராக தன்னாட்டு மக்களை பாதுகாக்கும் இஸ்ரேலின் முயற்சிகளுக்கு எங்கள் நாடுகள் துணை நிற்கும். இந்த சமயத்தில் எந்த தரப்பும் (எந்த நாடும்) இஸ்ரேலுக்கு விரோதமாக தாக்குதல்களை நடத்த இது ஏற்ற தருணம் அல்ல என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
பாலஸ்தீனிய மக்களின் நியாயமான கோரிக்கைகளை நாங்கள் அனைவரும் ஆதரிக்கிறோம். மேலும் இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் சமமான நீதி மற்றும் சுதந்திரம் கிடைக்கவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், ஹமாஸ் அமைப்பு அப்படி எந்த பாலஸ்தீனகோரிக்கைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இந்த செயல் பாலஸ்தீன மக்களுக்கு பயங்கரவாதத்தையும், இழப்பையும் தான் பெற்று தரும்.
வரவிருக்கும் நாட்களில், இஸ்ரேல் தன்னைத் தற்காத்து கொள்ள முடியும் என்பதை உறுதிப்படுத்தவும், இறுதியில் அமைதியான மற்றும் ஒருங்கிணைந்த மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான நிலைமைகளை அமைப்பதற்கும், இஸ்ரேலின் நட்பு நாடுகளாகவும், பொதுவான நண்பர்களாகவும் நாம் ஒன்றுபட்டு, ஒருங்கிணைந்து செயல்படுவோம். என வெள்ளை மாளிகை வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்ப்பிடப்படுள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…