Categories: உலகம்

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

Published by
மணிகண்டன்

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார்.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் வெளியாகிவிட்டன. இதில் 14 வருட கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சியை மக்கள் முடிவுக்கு கொண்டு வந்து, 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொழிலாளர் கட்சிக்கு மக்கள் பிரிட்டனை ஆளும் ஆளும் அதிகாரத்தை அளித்துள்ளனர்.

இங்கிலாந்தில் மொத்தமுள்ள 650 தொகுதிகளில் 412 தொகுதிகளை கன்சர்வேட்டிவ் கட்சியும், 121 தொகுதிகளை தொழிலாளர் கட்சியும், லிபரல் டெமாக்ரடிக் கட்சி 71 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகளுக்கு அடுத்து ரிஷி சுனக், கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியையும், பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளளார். மேலும், பிரதமராக தனது இறுதி உரையையும் சற்று முன்பு நிகழ்த்தினார்.

ரிஷி சுனக்கின் ராஜினாமாவை அடுத்து இங்கிலாந்து மன்னர் 3ஆம் சார்லஸ், தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மரை அதிகாரபூர்வமாக புதிய பிரிட்டன் பிரதமராக அறிவித்து. ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார். புதியதாக பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர் பிரதமராக தனது முதல் உரையை மக்கள் முன் ஆற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், நீங்கள் (மக்கள்) எங்களுக்கு தெளிவான ஆணையை வழங்கியுள்ளீர்கள். நாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தவும், நமது நாட்டை ஒன்றிணைக்கவும் இந்த ஆணையை பயன்படுத்துவோம்.  நாடு மாற்றத்திற்காக வாக்களித்துள்ளது. நாம் ஒன்று சேர்ந்து முன்னேற வேண்டும். நாட்டை மாற்றுவது என்பது சுவிட்ச் ஆப், ஆன் செய்வது போல அல்ல. ஆனால், மாற்றத்திற்கான வேலை இப்போது தொடங்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

பொது சேவை என்பது ஒரு வரம். நீங்கள் தொழிலாளர் கட்சிக்கு வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும் எனது அரசாங்கம் உங்களுக்கு சேவை செய்யும்.  எங்களின் பணி அவசரமானது, அதை இன்றே தொடங்குகிறோம், மரியாதையுடனும் பணிவுடனும், தேசத்தை புதுப்பிக்கும் பணியில் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என்று உரையாற்றினார். மேலும், இங்கிலாந்தின் முதல் ஆசியபின்னணி கொண்ட பிரதமராக ரிஷி சுனக் செயல்பட்ட முயற்சியை நான் பாராட்டுகிறேன் என்றும் பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் உரையாற்றினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

2 days ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 days ago