Kim Jong Un [file image]
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், நாட்டின் இராணுவ உயர்மட்ட ஜெனரலை பதவி நீக்கம் செய்து, இராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்தவும், போருக்கான தயாரிப்புகளை மேற்கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே, வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் ஏழாம் பொருத்தம் என்றே சொல்லலாம். இதில், அடிக்கடி ஏவுகணை சோதனை என்ற பெயரில் வடகொரியா ஏவுகணைகளைத் தொடர்ச்சியாக சோதனை செய்து வருகிறது.
அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான இராணுவப் பயிற்சிகளுக்கு முன்னதாக வடகொரியா அதிபர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது, அமெரிக்காவும் தென் கொரியாவும் ஆகஸ்ட் 21 மற்றும் 24 க்கு இடையில் தங்கள் நாட்டின் இராணுவ ஒத்திகையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதனால், வடகொரியாவின் வடக்கு பகுதியில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது.
இந்நிலையில், இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரலுக்குப் பதிலாக ஜெனரல் ரி யோங் கில் நியமித்து, ஆயுதங்களின் உற்பத்தியை அதிகப்படுத்த உத்தரவிட்டார். மேலும், போர் பயிற்சிகளை மேற்கொள்ளவும், ராணுவம் தனது படைகளை போருக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கிம் அழைப்பு விடுத்திருக்கிறார். கடந்த வாரம் கூட, அவர் நாட்டின் ஆயுத தொழிற்சாலைகளுக்குச் சென்றார். அங்கு அவர் மேலும் ஏவுகணை இயந்திரங்கள், பீரங்கி மற்றும் பிற ஆயுதங்கள் கட்டப்பட வேண்டும் என்று கூறினார்.
வடகொரியா குடியரசு நிறுவப்பட்ட நாளின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், செப்டம்பர் 9ஆம் தேதி ராணுவ அணிவகுப்பை நடத்த உள்ளது. இதனால், வடகொரியா தனது இராணுவப் படைகளை வலுப்படுத்த பல துணை ராணுவ குழுக்களை பயன்படுத்துகிறது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…