மெக்சிகோ: தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து.! 10 பேர் உயிரிழப்பு, 60 பேர் காயம்..!

வடக்கு மெக்சிகோவில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஆராதனை நடந்து கொண்டிருக்கும் போது, மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 60 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் 4 மாத குழந்தை, 5 வயது குழந்தைகள் மூன்று பேர் மற்றும் 9 வயது குழந்தைகள் இரண்டு பேர் அடங்குவர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல் மற்றும் மீட்புத்துறையினர் மோப்ப நாய்களோடு சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மோப்ப நாய்களின் உதவியோடும், கூரை அடுக்குகளின் கீழ் ஊர்ந்து சென்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்து நடக்கும் போது தேவாலயத்தில் சுமார் 100 பேர் இருந்ததாகவும், அதில் 30 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. மெக்சிகோவில் நிலநடுக்கங்களின் போது கட்டிடங்கள் இடிந்து விழுவது பொதுவான ஒன்றாகும். இருந்தும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து விழும் நேரத்தில் எந்தவித நிலநடுக்கமும் பதிவாகவில்லை என தெரிவித்துள்ளது.
எனவே, இந்த விபத்து தேவாலயத்தின் ஒருங்கற்ற கட்டமைப்பால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை காயமடைந்த 60 பேரில் 23 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. உயிர் இழப்பு மற்றும் காயமடைந்தவர்களுக்கு நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று மெக்சிகன் பிஷப்ஸ் கவுன்சில் இரங்கல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
July 4, 2025
3 இடங்களில் சிகரெட் சூடு…இதயத்தில் ரத்தக்கசிவு? அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்த அதிர்ச்சி தகவல்!
July 4, 2025