Nigeria mosque collapses [file image]
வடமேற்கு நைஜீரியாவின் கடுனா மாநிலத்தில் உள்ள மசூதியில் நூற்றுக்கணக்கான மக்கள் தொழுகையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடக்கு நைஜீரியாவின் பெரிய நகரங்களில் ஒன்றான ஜரியாவில் ஜரியா மத்திய மசூதி உள்ளது. மசூதியின் ஒரு பகுதி இடிந்து விழுந்த தகவல் அறிந்த மீட்புப் படையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், இந்த சம்பத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட 23 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்ட்டுள்ளனர். மீட்புப் பணிகளில் அவசரகால பேரிடர் மேலாண்மை அமைப்பினர் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி கூறுகையில், இந்த மசூதி 1830களில் கட்டப்பட்டுள்ளது. மிகவும் பாரம்பரியமான மசூதி என்பதால், இங்கு நடைபெறும் தொழுகை மிகவும் பிரபலமானது. வாரந்தோறும் நடைபெறும் இந்த தொழுகையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வர். இந்த நிலையில் நேற்று தொழுகை நடைபெற்றபோது, மசூதியின் மேற்கூரை எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் இருந்து 7 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.
தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார். இதனிடையே, கடுனா மாநில கவர்னர் உபா ஷனி, இந்த விபத்து குறித்து உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார், சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக உறுதியளித்தார். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில், கடந்த ஆண்டில் 10கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்ததை, அடுத்து நேற்று மசூதி இடிந்து விழுந்தது.
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…