Bangladesh – வங்கதேச தலைநகர் டாக்கா நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேச தலைநகர் டேக்காவில் பெய்லி சாலையில் உள்ள வணிக கட்டிடத்தில் நேற்று இரவு 9.45 மணியளவில் முதல் தளத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் உள்ள சமைலயறையில் தீ பற்றியது என அந்நாட்டு செய்தி நிறுவனமான டாக்கா ட்ரிப்யூன் (Dhaka Tribune) செய்தி வெளியிட்டுள்ளது. Read More – பாகிஸ்தானுக்கு 2 […]
Pakistan : பாகிஸ்தானுக்கு 2 பில்லியன் டாலர் கடனை சீனா வழங்கியுள்ளது என்று பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டில் நிதி அமைச்சர் ஷம்ஷாத் அக்தர் உறுதிப்படுத்தினார். பாகிஸ்தானில் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த 8ம் தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவில் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்கைள் 90க்கும் மேற்பட்ட இடங்களையும், நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 75 இடங்களையும், பிலாவல் புட்டோ […]
Russia Ukraine War : கடந்த வாரம் ரஷ்யாவில் நடைபெற்ற உக்ரைனில் நடைபெற்ற போரில் ரஷ்ய ராணுவத்திற்காக சண்டையிடும் போது இந்தியாவை சேர்ந்த 23 வயதான ஹெமில் மங்குயா ஆளில்லா விமான தாக்குல் விபத்தில் மரணமடைந்தார். அவர் இறந்த பிறகு அவரது நண்பரான தாஹிர் முகமது இது விபத்து அல்ல, கொலை என்பதை விளக்கி கூறி இருக்கிறார். Read More :- அதிபர் வேட்பாளர் தேர்தல்: மிச்சிகனில் ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் வெற்றி..! இந்த சம்பவம் […]
Michigan: இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்த மிச்சிகன் மாகாண தேர்தலில் அதிபர் ஜோ பைடனும் , முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் வெற்றி பெற்றனர். இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் இரு தலைவர்களிடையே போட்டி இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மிச்சிகன் மாகாண தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது வேட்பாளரான மரியான் வில்லியம்சனை ஜோ பிடன் தோற்கடித்தார். அதே நேரத்தில் டொனால்ட் டிரம்ப் இந்திய வம்சாவளி வேட்பாளர் நிக்கி ஹேலியை எளிதாக […]
அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு விமானப்படை வீரர் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் – காசா இடையிலான போர் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவின் ராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சர்வதேச அளவில் அதிர்வலையை கிளப்பியுள்ளது. Read More – ரம்ஜானை முன்னிட்டு இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்.. அமெரிக்க அதிபர் தகவல்.! அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் ஆரோன் […]
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தொடர்ந்து தாக்குதலைகளை நடத்தி வருகிறது. இரு தரப்பு போரை நிறுத்த கோரி பல்வேறு நாட்டு தலைவர்கள் , உலகளாவிய அமைப்புகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்தும் இன்னும் காஸாவில் போர் சத்தம் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 10ஆம் […]
மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றாக விளங்கும் புர்கினா பாசோ (Burkina Faso) எனும் நாட்டில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று வழக்கம் போல ஞாயிற்று கிழமை சிரப்பு நடைபெற்று வந்தது. அந்த சமயம் திடீரென உள்ளே புகுந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் தங்கள் துப்பாக்கிகளால் தேவாலயத்தில் இருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் 2 பேர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ReadMore – சீனாவில் […]
அமெரிக்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்திய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 17 பேர் வரை காயமடைந்த நிலையில் உயிரிழந்த நபரின் பெயர் பாசில் கான் (27) என தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹார்லெம் பகுதியில் செயின்ட் நிகோலஸ் பிளேஸ் என்ற குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில், திடீரென லித்தியம் பேட்டரி ஒன்று வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து கட்டிடம் முழுவதும் தீப்பற்றி பரவியது. இதனால், அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் […]
சீனாவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 44 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் அந்நாட்டில் நிகழ்ந்த இரண்டாவது பெரிய தீவிபத்து இதுவாகும். அதன்படி கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதி கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர். இன்றைய தினம் சீனாவின் நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. […]
இன்று காலை ஜெர்மனியில் ஓர் புதிய சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சட்டதிருத்தம் தான் தற்போது உலகம் முழுக்க மிகவும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது, நமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள கஞ்சா எனும் போதை பொருளை ஜெர்மனி சட்டபூர்வமாக அனுமதிக்கும் சட்ட மசோதா தாக்கல் செய்யபட்டுள்ளது. இந்த மசோதா மூலம் வரும் ஏப்ரல் மாதம் முதல் கஞ்சா ஜெர்மனியில் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த அனுமதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது போல பல்வேறு உலக நாடுகள் கஞ்சாவை சட்டபூர்வமாக […]
பிரேசில் நாட்டின் Rio de Janeiro (state) மாகாணத்தில் கடுமையான மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ஆம் தேதி முதல் மாகாணத்தின் தெற்கு பகுதியில் கனமழை பெய்கிறது. அதன்படி 42.8 மில்லி மீட்டர் அளவுக்கு கன மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Rio de Janeiro (state) மாகாணத்தின் ஒரு பகுதியான Banguவில் 43.2 மில்லி மீட்டர் என்ற அளவில் மழையானது பதிவாகியுள்ளது. மழை வெள்ளம் காரணமாக […]
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரும், ரஷ்ய அதிபர் புதினை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்த்து வந்தவருமான அலெக்ஸி நவல்னி கடந்த வாரம் வெள்ளியன்று உயிரிழந்தார். இவர் ரஷ்யாவின் கடும் குளிர் பகுதியான ஆர்டிக் பகுதி சிறைசாலையில் சிறை தண்டனை அனுபவித்து வந்திருந்த நிலையில் மரணடமடைந்தார் என்பது உலகம் முழுக்க பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. நவல்னி மரணத்திற்கு பிறகு ரஷ்யாவில் அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது மரணம் பற்றிய உண்மையான காரணம் தெரியவேண்டும் என […]
டெக்சாஸை தளமாகக் கொண்ட “இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ்” என்ற நிறுவனம் நேற்று மாலை நிலவில் லேண்டர் ‘ஒடிஸியஸ்’ விண்கலத்தை தரையிறக்கியது. இதனால் நிலவில் முதல் விண்கலத்தை தரையிறக்கி அமெரிக்க தனியார் நிறுவனம் என்ற வரலாறு சாதனை படைத்ததுடன், 50 ஆண்டுகளுக்கும் மேல் நிலவை சென்றடைந்த முதல் அமெரிக்க விண்கலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ் நிறுவனத்தின் லேண்டர் ‘ஒடிசியஸ்’ நிலவின் தென் துருவத்திற்கு அருகே தரையிறக்கிய பின்னர் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கா மீண்டும் […]
நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்ததாகவும், 100 பேர் காயமடைந்தனர் என ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவத்தினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி முதல் தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் குழுவினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையேயான போர் 4 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் காசாவில் இதுவரை 29,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நகர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய காசா பகுதியில் நேற்று […]
இங்கிலாந்து நாட்டில், நிறுவனம் ஒன்றில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த பெண்ணொருவர் மீதமிருந்த ஒரு சாண்ட்விச்சை சாப்பிட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் லண்டனில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றில் கேப்ரியலா ரோட்ரிக்ஸ் என்ற பெண், தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் அலுவலக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது அதில் கலந்துக் கொண்டவர்களுக்கு சாண்ட்விச் உணவு வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாண்ட்விட்ச்-ஐ சாப்பிட்டு விட்டு, […]
இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் தனது துணை ஜனாதிபதி யார் என்பதற்கான சில பெயர்களை டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர். துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க உள்ள பெயர் பட்டியலில் இந்திய-அமெரிக்க பயோடெக் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசாமியும் உள்ளார் என முன்னாள் ஜனாதிபதியும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். நேற்று முன்தினம் ஃபாக்ஸ் நியூஸ்(Fox News )டவுன் ஹால் நிகழ்ச்சியின் […]
ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக அரசியல் ரீதியில் செயல்பட்டு வந்தவரும், எதிர்கட்சி தலைவராகவும் செயல்பட்டு வந்த அலெக்ஸி நவல்னி கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார் என சனிக்கிழமை அன்று ரஷ்ய சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். அலெக்ஸி நவல்னி தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுப்பட்டதாக கூறி அவர்மீது குற்றம் சாட்டப்பட்டு கடும் குளிர் நிறைந்த ஆர்டிக் பகுதி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிறையில் இருந்த நவல்னியின் திடீர் மரணம் ரஷ்யா மட்டுமின்றி உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. […]
நீண்ட இழுபறி, குழப்பங்களுக்கு பிறகு பாகிஸ்தானில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML – N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானதால் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்பும், அதிபராக ஆசிப் அலி சர்தாரியும் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. பெரும் பதற்றம், அடுத்தடுத்த குண்டு வெடிப்பு மற்றும் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த 8ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. பின்னர் வாக்கு எண்ணிக்கையில் தொடர் இழுபறி நீடித்து வந்த […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்த்தவரும், எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டவருமான அலெக்ஸி நவல்னி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆர்டிக் சிறையில் உயிரிழந்தார். இவரது மரணத்தில் பல்வேறு சந்தேகம் இருப்பதாக கூறி நவல்னி ஆதரவாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அலெக்ஸி நவல்னி மீது தீவிரவாத குற்றசாட்டுகளை முன்வைத்து அவரை கடந்த 2020ஆம் ஆண்டு ரஷ்ய அரசு கைது செய்து அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இருந்தது. இந்த தண்டனை பெற்று வந்த […]
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணம் தற்போது ரஷ்யாவை தாண்டி உலகம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது. நவல்னியின் மரணம் பற்றிய செய்தியில் வெளிப்படை தன்மை இல்லை. அவர் இறப்புக்கு புதின் கரணம், விஷம் கொடுத்து மர்மமான முறையில் நவல்னி கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற பல்வேறு குற்றசாட்டுகளை நவல்னி ஆதரவாளர்கள் முன்வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். ரஷ்யாவின் கடும் குளிர் பகுதி சிறைக்கு சில மாதங்களுக்கு முன்னர் மாற்றப்பட்ட நவல்னி , கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாக ரஷ்யா […]