உலகம்

பிணை கைதிகள் பரிமாற்றம்.. மீண்டும் நீடிக்கப்பட்ட இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்.!

இஸ்ரேல் – ஹமாஸ் போரானது கடந்த அக்டோபர் மாதம் துவங்கி 50 நாட்கள் கடந்து நடைபெற்று வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் 1400 பேரும், காசா நகரில் 14000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் உயிரிழந்தனர். இரு தரப்பில் இருந்தும் பலர் பிணை கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இஸ்ரேல் ஹமாஸ் போரை நிறுத்த கோரி பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அமெரிக்கா, எகிப்து , கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தலம் செய்த பிறகு 4 நாட்கள் போர் நிறுத்ததிற்கு […]

#hostage 4 Min Read
israel hamas ceasefire

ஒரே பாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த முதல் தெற்காசிய நாடு நேபாளம்!

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 5 மாதங்களுக்கு பிறகு, நேபாளம் அதிகாரப்பூர்வமாக ஒரே பாலின திருமணத்தின் முதல் பதிவை செய்துள்ளது. இதனால், ஒரே பாலின திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த முதல் தெற்காசிய நாடு நேபாளம் ஆகும். நேபாளத்தில் தன் பாலினத் திருமணங்களுக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த 2007-ம் அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து 2015ம் ஆண்டில் இயற்றப்பட்ட புதிய அரசமைப்பு சட்டத்திலும் பாலினத் தேர்வின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டக்கூடாது […]

#Nepal 9 Min Read
Same Sex Marriage

கணவன் – மனைவி சண்டை.! டெல்லியில் தரையிறங்கிய பாங்காங் விமானம்.!

இன்று (புதன்கிழமை) ஜெர்மனி, முனிச் நகர் விமான நிலையத்தில் இருந்து லுஃப்தான்சா விமான எண் LH772 எனும் விமானம் பாங்காங்க் நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் ஜெர்மனியை சேர்ந்த கணவனும், தாய்லாந்தை சேர்ந்த அவரது மனைவியும் பயணித்துள்ளனர். விமானம் பறந்து கொண்டிருக்கும் சமயம், கணவன் மனைவி இடையே பிரச்சனை எழுந்ததாக தெரிகிறது. உடனே தாய்லாந்தை சேர்ந்த அந்த பெண் விமானியிடம் இதனை கூறியுள்ளார். தன் கணவரால் தனக்கு ஆபத்து இருக்கிறது என புகார் கூறியுள்ளார். இந்த விவகாரம் […]

#Delhi 4 Min Read
Lufthansa flight

சிறையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்… விசாரணை நடத்த பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இமரான் கான், சைபர் வழக்கில் ரகசியங்களைக் கசிய விட்ட குற்றத்திற்காகவும், மேலும் ஒரு சில வழக்கில் சிறையில் உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். இதன்பின் பாகிஸ்தானி பொருளாதார நெருக்கடி காரணமாக அரசு மீது பல்வேறு எதிர்ப்புகள் வந்தது. இம்ரான் கான் தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகிய முக்கியக் கட்சி ஒன்று, எதிர்க்கட்சியுடன் இணைந்தது. இதனால், இதனால் நாடாளுமன்றத்தில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை […]

imran khan 8 Min Read
imran khan

நீடிக்கும் போர் நிறுத்தம்… 30 பாலஸ்தீன கைதிகள், 12 இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிப்பு.!

கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி துவங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் 50 நாட்களை கடந்து நடைபெற்று வந்தது. இந்த போரின் விளைவாக இஸ்ரேல் தரப்பில் 1200 பேர் உயிரிழந்தனர். 240 பேர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் கொண்டு செல்லப்பட்டனர். அதே போல, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 14 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிப்பு.! […]

12 Israeli hostages 4 Min Read
Israel Hamas War

உக்ரைன் நகரத்தை நோக்கி முன்னேறும் ரஷ்ய படைகள்.. மீண்டும் தீவிரமடையும் போர்!

ரஷ்யப் படைகள் உக்ரேனிய நகரத்தை நோக்கி எல்லாப் பக்கங்களிலிருந்தும் முன்னேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான யுத்தம் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய நிலையில்,  இன்றும் தொடர்ந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் நடந்து வந்த தாக்குதல் சற்று குறைந்துள்ள நிலையில், அவ்வப்போது […]

#Russia 5 Min Read
Russian forces

டிஸ்போசபிள் வேப்ஸ்களின் இறக்குமதியை தடை செய்யும் ஆஸ்திரேலியா.! சுகாதார அமைச்சர் தகவல்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய கூடிய டிஸ்போசபிள் வேப்ஸ்களின் இறக்குமதியை ஜனவரியிலிருந்து தடை செய்ய ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார். வளரும் இளைஞர்களிடையே இந்த சாதனங்கள் மிகவும் பிரபலமடைவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகையிலையில் அதிகளவில் காணப்படும் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் நிரப்பப்பட்ட இந்த வேப்ஸ், ஒரு வகை இ-சிகரெட் ஆகும். சாதாரண புகையிலை போல வேப்ஸ்களுக்கும் பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில் […]

Australia 5 Min Read
DisposableVapes

பெற்றோர்களே உஷார்..! 10 வயது குழந்தையின் மூளையை உட்கொண்ட அமீபா..! குழந்தையின் நிலை என்ன..?

அமெரிக்கா நாட்டில் கொலம்பியாவில், புக்காரமங்காவைச் சேர்ந்த ஸ்டெபானியா என்ற சிறுமி சான்டா மார்ட்டாவில் உள்ள தண்ணீரில் விளையாடியுள்ளார். இதனை தொடர்ந்து அந்த சிறுமிக்கு காது வலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டது. ஆரம்பத்தில்,  அந்த சிறுமிக்கு காது வலிக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 15 நாட்களுக்கு பின், படுக்கையில் இருந்து எழுந்திருக்க சிரமப்பட்டார் மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிப்பு.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு.!  அவர் சிகிச்சை […]

#Death 4 Min Read
Amoeba

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிப்பு.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு.! 

கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு பிறகு, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தினர். இத தாக்குதலில் இதுவரை இரு தரப்பில் இருந்தும் சுமார் 14 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் காசா நகர் பாலத்தீனியர்கள். இந்த போரில் அதிகமாக பாதிக்கப்படுவது சாமானிய மக்கள் என்பதை கூறி போர் நிறுத்தத்தை பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தனர். இதனை […]

#Joe Biden 6 Min Read
US President Joe biden

ஹமாஸை ஒழிப்பது தான் ஒரே வழி.! இஸ்ரேல் பயணம் குறித்து எலான் மஸ்க் கருத்து.!

கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேல் தரப்பில் இருந்து சுமார் 1400 பேர் உயிரிழந்தனர். மேலும் கிட்புட்ஸில் இருந்த பல்வேறு நாட்டை சேர்ந்தவர்களை பிணை கைதிகளாக கடத்தி சென்றனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக  இஸ்ரேல் ராணுவம் , ஹமாஸ் அதிகம் இருக்கும் காசா நகர் மீது தொடர் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதல்களில் சுமார் 14 ஆயிரம் பேர் […]

Elon Musk 5 Min Read
Elon musk visited in Israel

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம் – மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு..!

கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் காஸாவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. பலர் அகதிகளாக காஸா பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கத்தார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கடந்த 22-ஆம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டது. […]

#Gaza 3 Min Read
gasa

சீனாவில் அடுத்த கொரோனா பாதிப்பா.? குழந்தைகளுக்கு வேகமாக பரவும் சுவாச நோய்.!

சீனாவில் சமீபத்திய நாட்களில் சுவாச நோய் தொற்று பரவிவரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சீனாவில் புதிய சுவாச நோய் தொற்று உருவாகியுள்ளதா என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது. இதற்கு விளக்கமளித்த சீன சுகாதரத்துறை அமைப்பு, இப்போது அதிகமாக பரவி வரும் சுவாச நோய் என்பது பருவகால சுவாச நோய் என்றும் இது வழக்கமான எண்ணிக்கையை விட சற்று அதிகம். இருந்தாலும், புதியதாக எந்த வைரஸ் தொற்றும் […]

#China 5 Min Read
RespiratoryDisease

இனி இந்த நாடுகளுக்கு செல்ல விசா அனுமதி தேவையில்லை.! எப்போது முதல் தெரியுமா.?

சுற்றுலாத்துறையை பெரும் வருமானமாக கொண்ட பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா பயணிகளை வரவைக்க , அவர்களை ஈர்க்கும் விதத்தில் பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவிப்பதுண்டு. அந்தந்த நாடுகளில் சுற்றுலா பயணிகளின் வருகையை கணக்கிட்டு வருமானம் குறைவாக இருந்தால் இந்த சலுகைகள் வருவது வழக்கமான ஒன்று. இதில், முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுலாத்துறையை பெரிதும்  நம்பி இருக்கும் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததை தொடர்ந்து,  கடந்த மாதம் நவம்பர் மாதம் 10ஆம் […]

#Visa 4 Min Read
Malaysia VISA

உக்ரைன் மீது 70-க்கும் மேற்பட்ட ட்ரோன் தாக்குதல் ஐந்து பேர் காயம்..!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய நிலையில், இந்த போர் நடவடிக்கை 2-வது ஆண்டை நெருங்கி உள்ளது. இந்த போர் தாக்குதலில் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையில் சண்டை சற்று குறைந்துள்ள நிலையில் அவ்வப்போது ஏவுகணை தாக்குதல்நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்யா நேற்று ஒரே இரவில் கிய்வ் மீது […]

#Ukraine 3 Min Read

2021ல் ஐரோப்பாவில் 2,50,000 இறப்புகள்.. காரணம் என்ன? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஐரோப்பிய சுற்றுச்சூழல் அமைப்பின் (EEA) அறிக்கையின்படி, கடந்த 2021இல் ஐரோப்பிய ஒன்றியத்தில் 2,50,000க்கும் மேற்பட்டவர்களின் மரணத்துக்கு நுண்ணிய துகள் மாசுபாடு தான் காரணம் என அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. நுண் துகள்கள் அல்லது PM2.5 என்பது கார் புகைகள் அல்லது நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்களின் உருவாகுவதாகும் என கூறப்படுகிறது. நுண்ணிய துகள்கள் செறிவுகள் உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகளை பூர்த்தி செய்திருந்தால், அந்த மரணங்களை தவிர்த்திருக்கலாம் என கூறபடுகிறது. அதாவது, ஐரோப்பிய சுற்றுச்சூழல் […]

#Air pollution 6 Min Read
Air Pollution

ஷாப்பிங் மாலில் ஏற்பட்ட தீ விபத்து – 11 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள பல மாடி வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. RJ ஷாப்பிங் மால் கட்டிடத்தில் காலை 6 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பல மணிநேர முயற்சிகளுக்குப் பிறகு இறுதியாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் பல இந்த விபத்தில் […]

#Death 4 Min Read
fireaccident

நிறுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சத்தம்.. பிணை கைதிகளை விடுவித்த ஹமாஸ் – இஸ்ரேல்.!

பாலஸ்தீன நாட்டின் காசா நகரில் , இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த ஒரு மதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1400 பேரும், ஹமாஸ் தரப்பில் காசா நகரில் சுமார் 15000 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காசா நகரில் நிலவும் போர் காரணமாக உயிர்சேதங்களில் பெண்கள், குழந்தைகள் அதிகமானோர் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயிர்சேதம் அதிகமாவதை கண்டு உலக நாடுகள் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தை […]

4 day ceasefire 5 Min Read
Hamas Released Isreal and Tailand Hostages

இந்தெந்த நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இனி விசா தேவையில்லை.. சீனா அறிவிப்பு

சீனாவில் பருவகால சுவாச நோய் தொற்று தற்போது அதிகரித்துள்ளது. இதனால் சமீபத்திய நாட்களில் சீன மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சீனாவில் புதியதாக ஏதேனு சுவாச நோய் தொற்று உருவாகி உள்ளதாக என்ற சந்தேகம் உலக சுகாதார அமைப்புக்கு எழுந்தது. ஏனெனில், முன்னர் கொரோனா போல பெருந்தொற்றுகள் சீனாவில் இருந்து தான் மற்ற நாடுகளுக்கு பரவின. இதனால் அச்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில், தொற்று நோய்க்குப் பிறகு சுற்றுலாவுக்கு […]

#China 7 Min Read
free visa

இன்றைய உலகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது.! தாய்லாந்தில் RSS தலைவர் பேச்சு.!

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக இந்து காங்கிரஸ் மாநாடு நடைபெறும். 2023ஆம் ஆண்டுக்கான உலக இந்து காங்கிரஸ் மாநாடு தாய்லாந்தில் நடைபெற்றது. இன்று (நவம்பர் 24) தொடங்கிய மாநாடு நாளை மறுநாள் (நவம்பர் 26) முடிவுபெறும். தாய்லாந்தில் நடைபெற்ற இந்து காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற இந்து அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் எனும் ஆர்எஸ்எஸ் (RSS) அமைப்பின் தலைவர் மோகன் பகவத் இந்து சமயம் பற்றியும் , கலாச்சாரம் பற்றியும், இன்றைய உலகம் என்றும் பல்வேறு கருத்துக்களை […]

'World Hindu Congress 2023 6 Min Read
RSS leader Mohan Bhagwat

காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்.! 30 பேர் உயிரிழப்பு, 100 பேர் காயம்.!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் காசா பகுதியில் இடைவிடாத வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களை ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தி வருகிறது. இதனால் இரண்டு பக்கங்களிலும் இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும், பெரும்பாலும் காசா பகுதியில் இருக்கும் பாலஸ்தீனியர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, இஸ்ரேல் மக்கள் 1,400 பேர் உயிரிழந்ததாகவும். காசா நகரில் 6,150 குழந்தைகள் மற்றும் 4,000 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாகவும் […]

Gazaschool 5 Min Read
Gazaschool