Pakistan - petrol price [file image]
பாகிஸ்தான் : பணவசதி இல்லாத பாகிஸ்தானில் பணவீக்கத்தால் விலைவாசி உயர்ந்துள்ளது. இதனால், அங்கிருக்கும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஈத் உல் அதா (பக்ரீத்) பண்டிகையை முன்னிட்டு, பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் (HSD) விலையை அந்நாட்டு அரசாங்கம் குறைத்துள்ளது.
அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.10.20 குறைக்கப்பட்டு ரூ.258.16 ஆகவும், அதிவேக டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.33 என குறைக்கப்பட்டு ரூ.267.89 ஆக விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை மாறுபாட்டின் அடிப்படையில், எண்ணெய் மற்றும் எரிவாயு ஒழுங்குமுறை ஆணையம் (ஓக்ரா) நுகர்வோர் விலைகளை நிர்ணயித்துள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு 15 நாட்களுக்கும் எரிபொருள் விலையை மதிப்பாய்வு செய்யும் நிதிப் பிரிவு, சமீபத்திய விலைக் குறைப்புகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, அடுத்த 15 நாட்களுக்கு இந்த புதிய விலைகள் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…