Taiwan Earthquake [FILE IMAGE]
Taiwan Earthquake: தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வந்துள்ளது.
தைவானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது மற்றும் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 143 க்கும் மேற்பட்ட நபர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தீவு நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் (CNA) தெரிவித்துள்ளது.
இதுவரை கிடைத்த தரவுகளின்படி, உயிரிழந்த ஒன்பது பேரில் ஐந்து பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் அடங்குவர். தைவான் தலைநகர் தைபேயில் நேற்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தைவான் மத்திய வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது மட்டும் இல்லாமல், திடீரென நிலநடுக்கம் ஏற்பட்தால் அந்நகரத்தின் கட்டிடங்கள் சில சரிந்து விழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வைரலானது.
தற்போது, முன்னெச்சரிக்கையாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பேரிடர் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், தெற்கு ஜப்பானிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…