நினைவை இழந்த ஓட்டுநர்…சூப்பர் ‘ஹீரோவாக’ மாறி 66 உயிர்களை காப்பாற்றிய சிறுவன்…குவியும் பாராட்டுக்கள்.!!

Student Becomes Hero

ஓட்டுனர் மயங்கி விழுந்ததால், 7-ஆம்  வகுப்பு மாணவன் ஓடும் பேருந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து 66 பேரின் உயிரை காப்பாற்றிஉள்ளார். 

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் இருக்கும் கார்ட்டர் நடுநிலைப் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுநர் ஏப்ரல் 26 புதன்கிழமை பேருந்தை இயக்கும் போது “மயக்கம் அடைந்து சுயநினைவை இழந்தார்”. அப்போது பேருந்தில் இருந்த 7ம் வகுப்பு மாணவன் டில்லன் என்பவர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தினார்.

அந்த மாணவன் பேருந்தை நிறுத்தி, 66 பேரின் உயிரை காப்பாற்றிஉள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த பலரும் டில்லன்னை சூப்பர் ஹீரோ என பாராட்டி தள்ளி வருகிறார்கள்.

பேருந்து நின்ற பிறகு, அவசர உதவி எண்ணுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பிறகு பேருந்து ஓட்டுனரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின், டில்லனுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா ஒன்றும் நடத்தப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்