China Typhoon [Image source : WION]
சீனாவில் தற்போது பல்வேறு நகரங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்த சூறாவளி காற்றில் பல்வறு உயிர்சேதங்கள், பொருள்சேதங்கள் ஏற்பட்டுள்ளன என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறிப்பாக, சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுங் மற்றும் யாசெங் நகரில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சூறாவளி காற்று வீசியது. மேலும், சுகியன் நகரின் சில பகுதிகளில் சூறாவளி காற்று தாக்கியுள்ளது. மேலும் பலத்த மழை பெய்யும் என சீன வானிலை ஆய்வு மையமும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.
இந்த சீன சூறாவளி மற்றும் கனமழையில் சிக்கி நேற்று ஒரு நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த சூறாவளியால் 5,500க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 137 வீடுகள் சேதமடைந்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்..
சூறாவளி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் கடந்த சில வருடங்களாகவே பல இறப்புகள் நிகழ்ந்துள்ளன. 2022 இல், ஒரு சூறாவளியால் ஒருவர் உயிரிழந்தார் என்றும், 2021 ஆம் ஆண்டு 4 பேர் உயிரிழந்தனர் என்றும் , 2021இல் வுஹானில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…