Arunachal Pradesh [File Image]
Arunachal Pradesh : கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீன பாதுகாப்பு அமைச்சகம் இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகள் மீது உரிமை கொள்ளும் வகையில் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதி என்றும், அருணாச்சலப் பிரதேசம் என்று இந்திய அரசால் சட்டவிரோதமாக அந்த பகுதி அழைக்கப்படுவதாகவும், அதனை சீனா ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சீனா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது .
சீனாவின் இந்த ஆக்கிரமிப்பு கருத்து குறித்து அமெரிக்காவின் எதிர்ப்பை , வாஷிங்டனில் உள்ள இந்தியாவுக்கான வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் படேல் கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியப் பிரதேசமாக அமெரிக்கா அங்கீகரித்து வருகிறது. அம்மாநிலத்தின் மீதான சீன ஊடுருவலை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது என்று குறிப்பிட்டார்.
இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புத் வளர்ச்சி திட்டங்களால் அருணாச்சலப் பிரதேச மக்கள் தொடர்ந்து பயனடைந்து வருகிறார்கள். இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மீது சீனாவின் சட்டவிரோத உரிமைகோரல்களை முன்வைத்து சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்துக்களை நாங்கள் கவனித்து வருகிறோம்.
ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆதாரமற்ற வாதங்களை மீண்டும் மீண்டும் சீனா சொல்வதால், அது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தது, எப்போதும் இருக்கும். அதன் மக்கள் நமது வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களால் தொடர்ந்து பயனடைவார்கள் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…