இன்றைய இளம் தலைமுறையினரை அதிகமாக கவர்ந்திழுத்துள்ள ஒன்றாக இருப்பது இந்த டிக்-டாக் செயலி தான். இந்த செயலியின் மூலம், இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர்கள், வயதானவர்கள் என பலரும் தங்களது வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த விடீயோவிற்காக பலரும் ஆபத்தான இடங்களில் இருந்தும் வீடியோ எடுக்கின்றனர்.
இந்நிலையில், புனேவில் டிக் டாக் திரைப்பட விழா ஒன்று நடைபெற உள்ளது. இந்த விழாவை பிரகாஷ் யாதவ் நடத்துகிறார். இந்த விழா குறித்து அவர் கூறுகையில், பலரும் இந்த செயலியில் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர். பல மாணவர்கள் கல்லூரிக்கு வெளியில் நின்றும், வீடியோ எடுப்பதையும் பார்த்துள்ளேன் . இவர்களுக்காக ஏதாவது செய்யலாம் என்று தான் இந்த விழாவை ஏற்பாடு செய்ததாக கூறியுள்ளார்.
மேலும், இந்த விழாவில் இந்தி மற்றும் மராத்தி மொழியில் வெளியான டிக் டாக் வீடியோக்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என கூறியுள்ளார். இந்த வீடீயோக்களை அனுப்ப வரும் 20-ம் தேதி தான் கடைசி நாள். இதில் சிறந்த காமெடி, குணசித்திர நடிப்பு, சிறந்த ஜோடி, சமூக விழிப்புணர்வு, சுற்றுசூழல் என 12 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும், முதல் பரிசு ரூ.33,333, இரண்டாம் பரிசு ரூ.22,222 என்றும், பங்கேற்கும் அனைவர்க்கும் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…