இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவின் விண்வெளி பயண பாதை என்பது யாரையும் பின்தொடர்வது அல்ல.அனைவருக்கும் பொதுவான இலக்குகளை பகிர்ந்து கொள்வது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

PM Modi

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய விண்வெளித்துறையின் வளர்ச்சி பற்றிய பல்வேறு தகவல்களை கூறினார். இந்திய விண்வெளி துரையின் சாதனைகள் குறித்தும் விவரித்தார்.

அந்த வீடீயோவில் பேசியிருந்த பிரதமர் மோடி, விண்வெளி என்பது வெறும் இலக்கு மட்டுமல்ல. அது ஒரு ஆர்வம், தைரியம் மற்றும் கூட்டு முன்னேற்றத்தின் பலன். இந்திய விண்வெளிப் பயணம் இந்த உணர்வைப் பிரதிபலிக்கிறது. 1963-ல் ஒரு சிறிய ராக்கெட்டை ஏவியதிலிருந்து சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாக இந்தியா மாறியது வரை, இந்தியாவின் விண்வெளி பயணம் குறிப்பிடத்தக்கது.

எங்கள் ராக்கெட்டுகள் சுமைகளை சுமந்து விண்வெளிக்கு சென்றதை விட 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகளை தான் அதிகமாக சுமந்து செல்கின்றன. இது இந்திய அறிவியல் மைல்கற்கள் ஆகும். இந்தியா விண்ணில் ஏவிய சந்திராயன், 2, 3 ஆகியவை நிலவை பற்றிய அதிநவீன தகவல்களை தருகின்றன. இந்தியா இதுவரை 34 நாடுகளின் 400 செயற்கைகோள்களை சுமந்து சென்றுள்ளன. இது இந்தியவின் முக்கிய படியாகும்.

மற்ற நாடுகளின் எல்லைகளை பின்தொடர்வதோ, மற்ற நாடுகளை துரத்தி செல்வதோ நமது நோக்கம் இல்லை. அனைவருக்குமான பொதுவான இலக்குகளை பகிர்ந்து கொள்வது தான் நமது இலக்கு. அடுத்ததாக மனிதர்களை விண்ணிற்கு அனுப்பும் முயற்சியில் நாங்கள் ஈடுபட உள்ளோம் என பிரதமர் மோடி பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்