Categories: உலகம்

வெடித்து சிதறிய ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்.! அமெரிக்க விண்வெளி துறை மீது பாய்ந்த வழக்கு.!

Published by
மணிகண்டன்

ஸ்பேஸ்-எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் ராக்கெட் வெடித்து சிதறிய காரணத்தால் அமெரிக்க விண்வெளி துறையான US FAA மீது வழக்கு போடப்பட்டுள்ளது. 

கடந்த மாதம் அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஸ்பேஸ்-X நிறுவனத்திற்கு சொந்தமான ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட் சோதனை முறையில் விண்ணில் செலுத்தப்பட்டது. அப்போது இரண்டாவது கட்ட சோதனையின் போது ராக்கெட் வெடித்து சிதறியது. இது குறித்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ விஞ்ஞானிகள் கூறுகையில், எதிர்பார்த்த முறையில் சோதனை நடைபெறவில்லை எனவும், தவறுகள் சரிசெய்யப்பட்டு விரைவில் அடுத்த சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், ராக்கெட் வெடித்து சிதறிய இந்த நிகழ்வை குறிப்பிட்டு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான FAA (US Federal Aviation Administration) மீது வழக்கு தொடரபட்டு உள்ளன. அமெரிக்க வனவிலங்கு மற்றும் சுற்றுசூழல் குழுக்கள் தான் இந்த வழக்கை அமெரிக்க நீதிமன்றத்தில் தொடுத்துள்ள்ளது.

வனவிலங்குகள் அதிகம் இருக்கும் பகுதியில் இந்த ராக்கெட் ஏவப்பட்டு வெடித்து சிதறியதன் காரணமாக வனவிலங்குகள் மற்றும் சுற்றுசூழல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன என்றும், அதன் காரணமாக ஸ்பேஸ்எக்ஸுக்கு FAA வழங்கிய ஐந்தாண்டு உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

7 minutes ago

ராணுவ கர்னல் குறித்து சர்ச்சைப் பேச்சு – மன்னிப்பு கேட்ட விஜய் ஷா.!

டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…

8 minutes ago

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…

29 minutes ago

உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பி.ஆர்.கவாய்.!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…

1 hour ago

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…

1 hour ago

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…

2 hours ago