உலகம்

ஜுக்கர்பெர்க் நவீன கால புரூஸ் லீ! அவர் தான் வெற்றிபெறுவார்.! அந்தர் பல்டி அடித்த மஸ்க்!

Published by
செந்தில்குமார்

தொழில்நுட்ப வல்லுநர்களான எலான் மஸ்க் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் இருவருக்கிடையே தொழில்முறை போட்டியானது இருந்து வருகிறது. அதே போல, இவர்கள் இருவரும் ஒரு மாதத்திற்கும் மேலாக கூண்டு சண்டையில் ஈடுபடுவது பற்றி பேசி வருகின்றனர்.

இந்நிலையில், மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உடன் தான் பேசியதை எலான் மஸ்க், எக்ஸ் கணக்கில் பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல், வரலாற்றாசிரியர் வால்டர் ஐசக்சனிடமும் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள ஸ்கிரீன்ஷாட்டில், “அடுத்த வாரம் உங்கள் வீட்டில் பயிற்சி செய்வோமா?” என்று ஜுக்கர்பெர்க்கிடம் கேட்கிறார்.

அதற்கு கோவமான ஜுக்கர்பெர்க், “நீங்கள் உண்மையான எம்எம்ஏ சண்டையைச் செய்ய விரும்பினால், நீங்கள் சொந்தமாகப் பயிற்சி செய்து, நீங்கள் எப்போது போட்டியிடத் தயாராக உள்ளீர்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று பதிலளித்துள்ளார்.

மேலும், “ஒருபோதும் நடக்காத ஒன்றை நான் விளம்பரப்படுத்த விரும்பவில்லை, எனவே நீங்கள் இதைச் செய்யப் போகிறீர்கள் என்று முடிவு செய்து விட்டால் விரைவில் அதைச் செய்ய வேண்டும் ” என்றும் மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், “திங்கட்கிழமை நான் பாலோ ஆல்டோவில் இருப்பேன். அங்கு நாம் சண்டையிடுவோம். இன்று லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் ஒரு சிறிய போட்டியைத் தவிர, நான் அதிகம் பயிற்சி செய்யவில்லை. எங்கள் அளவு வித்தியாசத்தைப் பொறுத்தவரை, இது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன்” என்று கூறினார்.

மேலும், “நீங்கள் ஒரு நவீன கால புரூஸ் லீ, அதனால் எப்படியாவது வெற்றி பெறுவீர்கள்” என்றும் மஸ்க் தெரிவித்தார். இதற்கு முன்னதாக, எங்கள் இருவருக்கு இடையான போட்டி இத்தாலியில் நடைபெறும் என்றும் சண்டைபோடும் காட்சிகள் எக்ஸ் மற்றும் மெட்டாவில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

நாளை எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் சொன்ன தகவல்!

சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…

9 hours ago

“சாரித்திரம் புரட்டு போராட்டம் பல்லாயிரம்”…வலியிலும் வரலாறு படைத்த ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…

9 hours ago

இன்ஸ்டா பிரபலம் இலக்கியா விவகாரம் : திலீப் சுப்பராயன் விளக்கம்!

சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…

10 hours ago

திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை வழக்கு : மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…

11 hours ago

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

சென்னை :  பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…

11 hours ago

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகார் :  மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…

12 hours ago