மத்திய அரசு வருமானத்தை மட்டும் தான் பார்க்கிறது, உயிர்கள் பலியாவதை பார்ப்பதில்லை – சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

மாநில அரசுக்கான உரிமையில் தான் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளோம் என அமைச்சர் ரகுபதி பேட்டி.
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று, மத்திய அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில், ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை.
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில், மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் நடைபெறுவது தடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
இது குறித்து அமைச்சர் ரகுபதி அவர்கள் கூறுகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டுவர தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என ஒன்றிய அரசு வாதிட்டது தவறானது. மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டால் வரும் வருமானத்தை மட்டுமே பார்க்கிறார்கள் உயிர் பலியை பார்க்கவில்லை.
மாநில அரசுக்கான உரிமையில் தான் ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளோம். நேரடியாக மற்றும் ஆன்லைனில் விளையாடுவதற்கு வேறுபாடு உள்ளது மத்திய அரசின் ஒழுங்கு முறை விதிகள் வலுவானதாக இல்லை என தெரிவித்துள்ளார்.