ஊருக்கு ஒரு நியாயம்! உங்களுக்கு ஒரு நியாயமா? – ஜெயக்குமார்

இரண்டு ஆண்டுகளாக காவல்துறையை ஏவல்துறையாக மட்டுமே வைத்திருந்து செய்த கொடுஞ்செயல்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை என ஜெயக்குமார் ட்வீட்.
வருமான வரித்துறை அதிகாரிகள் 4 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்த அமைச்சர் செந்தில் பிலாஜி, காலை 5 மணிக்கு தூங்கி கொண்டு இருப்பவர்களை அவர்கள் எழுந்து வருவதற்கு சற்று கால தாமதம் ஆகலாம்.அதற்குள் அவசரப்பட்டு சுவர் ஏறி குதிக்கின்றனர்.
அதிகாரிகளின் பாதுகாப்பு இல்லாமல் தனியாளாக வந்ததால், அவரிடம் அடையாள அட்டை கேட்டனர். இருப்பினும், அதிகாரிகளின் சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இதே போல் தான் என்னை இரவில் கைது செய்து அன்றிரவு 12 மணிக்கே நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர் காவல்துறை. இரண்டு ஆண்டுகளாக காவல்துறையை ஏவல்துறையாக மட்டுமே வைத்திருந்து செய்த கொடுஞ்செயல்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை… ஊருக்கு ஒரு நியாயம்! உங்களுக்கு ஒரு நியாயமா?’ என பதிவிட்டுள்ளார்.
இதே போல் தான் என்னை இரவில் கைது செய்து அன்றிரவு 12 மணிக்கே நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர் காவல்துறை. இரண்டு ஆண்டுகளாக காவல்துறையை ஏவல்துறையாக மட்டுமே வைத்திருந்து செய்த கொடுஞ்செயல்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை…
ஊருக்கு ஒரு நியாயம்!
உங்களுக்கு ஒரு நியாயமா?#Karma pic.twitter.com/rWeRc5OICV— DJayakumar (@offiofDJ) May 29, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025