திரூவாரூரில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் இன்று திறப்பு..!

கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக இன்று கலைஞர் கோட்டம் திறப்பு.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக அவரது சொந்த ஊரான திருவாரூரில், கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டமானது சுமார் 7000 ஏக்கரில் 12 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக இன்று கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் திறந்து வைக்கிறார்.