நீட் தேர்வை திணித்தது காங்கிரசும், திமுகவும் தான். திமுகவும் காங்கிரசும் இதைவிட பெரிய துரோகத்தை தமிழகத்திற்கு செய்துவிட முடியாது என பொன்ராதாகிருஷ்ணன் பேட்டி.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்திய சுயசார்பு பாரதம் குறித்த காணொளி ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நீட் தேர்வு எப்படி வந்தது என்பதும், யார் கொண்டு வந்தார்கள் என்பதும் அனைவருக்குமே தெரியும். மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. நீட் தேர்வு மாணவர்களுக்கு எதிரானது தமிழகத்துக்கு எதிரானது என தற்போது திமுகவினர் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
இது மாணவர்களுக்கு எதிரானது என்று தெரிந்தும் நீட் தேர்வை திணித்தது காங்கிரசும், திமுகவும் தான். திமுகவும் காங்கிரசும் இதைவிட பெரிய துரோகத்தை தமிழகத்திற்கு செய்துவிட முடியாது. எனவே இந்த இரண்டு கட்சிகளும் தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …