Tamilnadu CM MK Stalin [Image source : PTI]
மக்களுக்கான அடிப்படை சேவைகள் கிடைத்திட முதல்வரின் முகவரி துறை உறுதுணையாக இருக்கும் முதல்வர் ட்வீட்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம் – அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. ஆயின் ஆலோசனை கூட்டத்தில், மக்களின் அன்றாட தேவைகள், திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் அரசின் சேவைகள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் காவல்துறையில் பெறப்படும் மனுக்கள் மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தேர்தலுக்கு முன்பு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற எனது சுற்றுப்பயணத்தில் பெற்ற மனுக்களைத் தீர்க்க உருவான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை, முதல்வரின் முகவரி என உருப்பெற்றது.
அதன் செயல்பாடுகள் பற்றிய ஆய்வுக்கூட்டத்தில், இன்று இத்திட்டத்தால் பலனடைந்தவர்கள் – வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகளிடம் உரையாடி – அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தேன். மக்களுக்கான அடிப்படை சேவைகள் கிடைத்திட முதல்வரின் முகவரி துறை உறுதுணையாக இருக்கும்! நமது திராவிட மாடல் அரசின் முன்னெடுப்புகள் கடைக்கோடி மனிதர் வரை பயனளிக்கும்!’ என பதிவிட்டுள்ளார்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…