Tamil Nadu government (Source: IE Tamil)
கர்ப்பிணிகளுக்கு விரைவில் நிலுவையில் உள்ள நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு விளக்கம்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கர்ப்பிணிகளின் நலனுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை தமிழக அரசு முடக்கியுள்ளது. மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.257 கோடி நிதி வழங்கியுள்ளது; நிதி கர்ப்பிணிகளுக்கு சென்று சேரவில்லை எனில் அந்த நிதி எங்கே செல்கிறது? என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தின்படி, கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை. மத்திய அரசின் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் காரணமாக மறுபதிவேற்றத்தில் காலதாமதம் ஏற்படுகிறது . கர்ப்பிணிகளுக்கு விரைவில் நிலுவையில் உள்ள நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.3000, மாநில அரசு சார்பில் ரூபாய்.2000 வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.18,000 தமிழக அரசு வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு நிதி உதவி அளிப்பதில் சிறிது கால தாமதம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இத்திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை. இத்திட்டத்தின் கீழ் 2018 முதல் 2023 வரை தமிழக அரசு சார்பில் ரூ.243 கோடி ஒதுக்கப்பட்டுரூ.178 கோடி செலவிடப்பட்டுள்ளது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…