மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்த்தி அரசாணை..!

tamilnadu govt

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை.

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு பயில்வோருக்கான கல்வி உதவித்தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2,000 ஆகவும், 6-8ஆம் வகுப்பு வரை ரூ.3000ல் இருந்து 6000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், 9-12ஆம் வகுப்பு வரை ரூ.4,000ல் இருந்து ரூ.8000 ஆகவும், இளநிலை பட்டப்படிப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.6,000ல் இருந்து ரூ.12,000 ஆகவும், முதுநிலை பட்டம், தொழிற்கல்வி பயில்வோருக்கு ரூ.7,000ல் இருந்து 14,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்