சீமான் சாத்தானாக மாறி விட்டதால் இப்படி பேசுகிறார் – அமைச்சர் செஞ்சி மஸ்தான்

தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட 247 ஹாஜிக்கள், இன்று அதிகாலை சென்னை வந்தடைந்த நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றார். இதனை தொடர்ந்து, அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர் தமிழக முதல்வரின் முயற்சியால், சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரிடம் இஸ்லாமியர்கள் குறித்து சீமான் அவர்கள் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், நாம் எதை சாப்பிடுகிறோமோ அது தான் ஏப்பமாக வரும். எனவே, சீமான் சாத்தானாக மாறிவிட்டதால் தான் இப்படி பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.
மேலும், வடமாநிலங்களில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், எல்லா மாநிலங்களிலும், அனைத்து சமுதாய மக்களிலும் இப்படி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய சிலர் இருப்பார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில், அமுதாழ்வார் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!
July 18, 2025
நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை.!
July 18, 2025
“தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!
July 18, 2025
ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா? கோடிகளை அள்ளிய பிசிசிஐ!
July 18, 2025