என் மனதில் உருவானதே நான் முதல்வன் திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு, ‘நான் முதல்வன்’ திட்ட சாதனை அரங்கை பார்வையிட்டார். மேலும், சென்னையில் கலைஞர் 100 என்ற இணையதள பக்கத்தையும் முதல்ல மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பின் ஏராளமான திட்டங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளன. நான் முதல்வன் திட்டத்தில் ஓராண்டாக மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் 13.14 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. மத்திய மாநில அரசு வேலைகளுக்கான தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெற்ற 80 ஆயிரத்து 53 பொறியியல் பட்டதாரிகளில் சுமார் 60 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
என் மனதில் உருவான திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். நான் முதல்வன் திட்டம் என் மனதிற்கு நெருக்கமான திட்டம். தமிழக மாணவர்கள், இளைஞர்கள் பன்முக ஆற்றலில் முன்னேறும் வகையில் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தலைமுறைக்கும் பயன் தரும் திட்டம். அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதில் தான் வெற்றி அடங்கியுள்ளது.
நான் முதல்வன் என்ற ஒரேயொரு திட்டம் தமிழ்நாட்டில் அறிவு புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் மூலம் 2 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். திட்டத்தை தம்பி உதயநிதி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் என்று பாராட்டினார்.