இம்ரான் கானுக்கு ஆதரவாக செயல்படுவிடுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்கட்சிகள், பிரதமர் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முனைப்பு காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானுக்கு ஆதரவாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரணியில் உரையாற்றிய, பிரதமர் இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்து தன்னை அகற்றுவதற்கு வெளிநாட்டு சதி நடப்பதாகவும் இதற்காக வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு பணம் அனுப்பப்படுவதாக குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர்களும் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்படாவிட்டால், தெருவில் இறங்குவோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும், நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருவது, பிரதமர் இம்ரான் கானுக்கு ஆதரவை சேகரிக்க அதிக அவகாசம் வாங்கும் முயற்சியாக கருதப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற சபாநாயகர் அசாத் கெய்சர், இம்ரான் கானுக்கு ஆதரவாக செயல்படுவிடுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…