ஒடிசா ரயில் விபத்து – ஒடிசா விரையும் பா.ஜ.க உதவி குழு…!

annamalai

விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள பாஜக தரப்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு ஒடிசாவில் நடைபெற்ற  ரயில் விபத்து நாட்டையே பெரும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. இந்த விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 900-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய,  தமிழர்களை மீட்கவும், அவர்களை பத்திரமாக தமிழகம் கொண்டு வந்து சேர்க்கவும் தமிழக அரசு தரப்பில் அபல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள பாஜக தரப்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணமாலை அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒரிசா ரயில் விபத்து – பா.ஜ.க உதவி குழு
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் ரயில்கள் மோதிக் கொண்ட கோர சம்பவம் நாட்டில் அனைவரையும் அதிர்ச்சிக்கும். துக்கத்திற்கும் ஆட்படுத்தியுள்ளது.

மீட்பு பணிகள் தொய்வின்றி இடையறாது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இந்த விபத்தில் சிக்கிய தமிழக சகோதர, சகோதரிகளுக்கு பரிபூரண உதவி செய்து, அவர்கள் நல்ல நிலையில் தமிழகம் திரும்பி தங்கள் குடும்பத்தாருடன் இணைந்திடும் வரை துணைநின்று, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திட தமிழக பா.ஜ.க சார்பில் கீழ்கண்ட குழுவானது அமைக்கப்பட்டு. இக்குழுவானது இன்றே ஒடிசா விரைந்து தங்களை பணியில் ஈடுபடுத்திக்கொள்ளும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக பா.ஜ.க உதவி குழு விவரம்:

தேசிய உறுப்பினர், ரயில்வே பயணிகள் வசதிகள் ஆலோசனை குழு
1.திரு.K.ரவிச்சந்திரன் PH : 98409 45919
2. திரு.K.P.ஜெயகுமார் மாநில தலைவர், பிற மொழி பிரிவு PH : 9444049949
3.திரு.A.N.S.பிரசாத் முன்னாள் மாநில தலைவர். ஊடக பிரிவு PH : 98401 70721

விபத்தில் சிக்கிய அல்லது ரயிலில் பயணித்த தங்கள் உற்றார். உறவினர். நண்பர்கள் யாருக்கேனும் எவ்வித உதவி தேவைப்பட்டாலும் இவர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்