இந்திய வரலாற்றின் மாபெரும் துயரங்களில் ஒன்று… கமல்ஹாசன் இரங்கல் ட்வீட்.!

KamalTweetCondole

ஒடிசாவில் நிகழ்ந்த விபத்து சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது கமல்ஹாசன் ட்வீட்.

ஒடிசாவில் நேற்று இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விபத்து குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்வீட்டில், ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதிய விபத்து மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.

நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்தில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளது நமக்கு மேலும் வேதனையை அதிகரிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன், மற்றும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவேண்டும் என விரும்பிக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்கள் இதன் தாக்கத்திலிருந்து மீள நாம் துணை நிற்போம் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்