அரசியல்

கேரளா வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் தலைவரின் வேட்பாளரின் போஸ்டர்கள்.!

கேரளாவில் நேற்று துவங்கப்பட்ட வந்தே பரத் ரயிலில் காங்கிரஸ் தொண்டர்கள் பலாக்காடு காங்கிரஸ் எம்பி போஸ்டர்கள் ஒட்டியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.  பிரதமர் மோடி கேரளா பயணம் மேற்கொண்டு வந்தே பாரத் ரயில் , இந்தியாவில் முதன் முதலாக தண்ணீர் மெட்ரோ கப்பல் என பல்வேறு திட்டங்களை துவங்கி.வைத்தார். இதில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்லும்.இந்த ரயிலானது கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம் டவுன், திருச்சூர், ஷோரனூர் […]

4 Min Read
Default Image

ஆளுநர் ரவி, எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் டெல்லி பயணம்.! தனித்தனியாக அமித்ஷா உடன் சந்திப்பு.! 

தமிழக ஆளுனர் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளனர்.  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளனர். அங்கு தனித்தனியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் சந்திப்பு நிகழ்த்த உள்ளனர். இன்று காலை ஆளுநர் ரவி 3 நாள் பயணமாக டெல்லி செல்ல உள்ளார். அதே போல், இன்று பிற்பகல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிச்சாமி டெல்லி செல்ல உள்ளார். […]

5 Min Read
Default Image

நாடாளுமன்ற தேர்தல்…நிர்வாகிகளுடன் ‘மக்கள் நீதி மய்யம்’ தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை!!

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வரும் 28-ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்நடைபெறவுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தங்களது கட்சியின் நிர்வாகிகளுடன் வரும் 28-ஆம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.  கமல்ஹாசன் தலைமையில்  “2024 பாராளுமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம்” என்ற பெயரில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் […]

4 Min Read
Default Image

பிரதமரின் ‘பிஎம் கேர்ஸ்’-க்கு சட்ட அனுமதி இன்றி நிதி திரட்டல்.? காங்கிரஸ் மூத்த தலைவர் சரமாரி கேள்வி.!

பிரதமரின் நிவாரண நிதி அமைப்பான பிஎம் கேர்ஸ் குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி பிஎம் கேர்ஸ் பற்றி பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், பிரதமரின் நிவாரண நிதி திட்டத்தின் கீழ் 5000 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ள இந்த நிதி மேலாண்மைக்கு வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும், அதற்கு அதிக பொறுப்புகள் இருக்க வேண்டும் எனவும் அபிஷேக் சிங்வி கூறினார். […]

5 Min Read
Default Image

கோடநாடு கொலை வழக்கு.! சசிகலா மற்றும் எடப்பாடி ஜோதிடரை விசாரிக்க சிபிசிஐடி முடிவு.!

கோடாநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சசிகலா மற்றும் எடப்பாடி ஜோதிடரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த கொலை கொள்ளை சம்பந்தமாக தீவிர விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ் என்பவர் ஏப்ரல் 24ஆம் தேதி அவரது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விசாரணையானது மேலும் […]

4 Min Read
Default Image

கர்நாடக தேர்தலில் அண்ணாமலைக்கு தடை.? காங்கிரஸ் பரபரப்பு புகார்.!

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய கூடாது என காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், பரிசீலனை , வாபஸ் எல்லாம் நிறைவு பெற்று 2,613 வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் கடந்த முறை ஆட்சியை இழந்த […]

3 Min Read
Default Image

5 முறை பஞ்சாப் முதல்வராக இருந்த பிரகாஷ் சிங் காலமானார்.! 2 நாள் தேசிய துக்கம் அனுசரிப்பு.!

5 முறை பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த 95 வயதான பிரகாஷ் சிங் பாதல் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார் . பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவரும், 5 முறை முதல்வராகவும் பதவி வகித்த பிரகாஷ் சிங் பாதல் வயது மூப்பு காரணமாக உடல்நல குறைவு காரணமாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்ததால் சில நாட்களுக்கு முன்னர் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை […]

4 Min Read
Default Image

இந்த சமூக விரோத சக்திகளைப் பார்த்து அரசு அஞ்சி நடுங்குகிறதா..? – டிடிவி தினகரன்

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர். பிரான்சிஸ் -க்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். டிடிவி தினகரன் ட்வீட்  இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மணல் கொள்ளை தொடர்பான விவகாரத்தில், தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அருகே கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் திரு.லூர்து பிரான்சிஸ் […]

5 Min Read
Default Image

#BREAKING : குஜராத் ஐகோர்ட்டில் ராகுல் காந்தி மேல்முறையீடு..!

ராகுல் காந்தி அவர்கள், அவதூறு வழக்கில் சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை செசன்ஸ் நீதிமன்றம் நிராகரித்தற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில்  முறையீடு பிரதமர் மோடி மற்றும் மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சூரத் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது. இந்த தீர்ப்பின் காரணமாக வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அவரது பதவி […]

4 Min Read
Default Image

ஒரு அரசு அலுவலருக்கே இத்தகைய நிலையென்றால் பாமர மக்களுக்கு இந்த ஆட்சியில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு? – ஈபிஎஸ்

ஒரு அரசு அலுவலருக்கே இத்தகைய நிலையென்றால் பாமர மக்களுக்கு இந்த ஆட்சியில் எங்கே இருக்கிறது பாதுகாப்பு? என ஈபிஎஸ் ட்வீட்  தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த லூர்து பிரான்சிசுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது குடுமபத்திற்கு இரங்கல் […]

8 Min Read
Default Image

அதிமுக ஆட்சியில் டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் வீண் செலவு தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறையில் 2019-2021 வரை 57 கணினிகளை பயன்டுத்தி 80க்கும் மேற்பட்ட டெண்டர் போடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் ஊழல்  எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியில் ஊழல் எப்படி தலைவிரித்து ஆடியது என்பதை சி.ஏ.ஜி தணிக்கை அறிக்கையில் விளக்கி […]

5 Min Read
Default Image

தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் மீதான தடை தொடருகிறது..! அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப் பொருட்கள் மீதான தடை தொடருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். புகையிலை பொருட்கள் விற்க தடை: தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருட்களை விற்பதற்கு தடை விதித்து கடந்த 2018ம் ஆண்டு தமிழக அரசு, அரசாணை ஒன்றை வெளியிட்டது. பின்னர், தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்ட்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் […]

4 Min Read
Default Image

புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து புதிய அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு வெளியிடலாம்- உச்ச நீதிமன்றம்

குட்கா பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு புதிய அரசாணை வெளியிடவும் உச்சநீதிமன்றம் அனுமதி குட்கா, பான் மசாலா மற்றும் இதர புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்து 2018ல் வெளியிட்ட அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக, மூத்த வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்ட்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் முறையிட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தின் ரத்து உத்தரவுக்கு தடை   கடந்த மாதம் இந்த வழக்கில் […]

3 Min Read
Default Image

மக்களே வார்த்தைகளை நம்பி வாக்களிக்காமல், மனசாட்சிப்படி வாக்களியுங்கள்; பிரியங்கா காந்தி பேச்சு.!!

மக்கள் வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் வாக்களிக்கக்கூடாது, மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என கர்நாடகாவில் பிரியங்கா காந்தி, கூறியுள்ளார்.  கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி, நடைபெறும் எனவும் வாக்கு எண்ணிக்கை மே 13இல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பலத்த போட்டி நிலவி வருகிறது. இன்னும் சில நாட்களில் தேர்தல் தொடங்கப்படவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரச்சாரம் […]

4 Min Read
Default Image

#BREAKING : உயிரிழந்த விஏஓ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி..! ஒருவருக்கு அரசு பணி..! : முதல்வர் மு.க.ஸ்டாலின்

உயிரிழந்த விஏஓ குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என முதல்வர் உத்தரவு.  தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் பிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்குள் புகுந்து வெட்டியுள்ளனர். இதனையடுத்து, படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் […]

5 Min Read
Default Image

எங்களுக்கு ஒரு முஸ்லிம் ஓட்டு கூட வேண்டாம் – கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சை பேச்சு

எங்களுக்கு ஒரு முஸ்லிம் வாக்கு கூட வேண்டாம் என்று கே.எஸ்.ஈஸ்வரப்பா பேச்சு.  கர்நாடகாவில், சிவமொக்காவில் நடைபெற்ற வீரசைவ-லிங்காயத் கூட்டத்தில் முன்னாள் துணை முதல்வரும், பா.ஜ., தலைவருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சையான முறையில் பேசியுள்ளார்.  இந்த நிகழ்வில் பேசிய கே.எஸ்.ஈஸ்வரப்பா, எங்களுக்கு ஒரு முஸ்லிம் வாக்கு கூட வேண்டாம் என்று பேசியது சர்ச்சையை எழுப்பியுள்ளது. கே.எஸ்.ஈஸ்வரப்பா சர்ச்சை பேச்சு இந்த பகுதியில், சுமார் 60,000 முஸ்லிம்கள் உள்ளனர். அவர்களின் ஒரு வாக்குகள் எங்களுக்கு வேண்டாம்.  தேசியவாத முஸ்லிம்கள் நிச்சயமாக எங்களுக்கு […]

3 Min Read
Default Image

களைகட்டும் கர்நாடக தேர்தல்…தீவிர பிரச்சாரத்தில் அமித்ஷா.!!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் பலத்த போட்டி நிலவுகிறது. பிரச்சாரம் தீவிரம் இன்னும் சில நாட்களில் தேர்தல் தொடங்கப்படவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.  ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரசும் ஈடுபட்டு […]

5 Min Read
Default Image

குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளை கூட அரசால் வழங்க முடியவவில்லை..! கே.சி.ஆர் விமர்சனம்..

மஹாராஷ்டிராவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், அம்மாநில அரசை விமர்சித்தார். மஹாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய தெலுங்கானா முதல்வரும், பிஆர்எஸ் தலைவருமான கே சந்திரசேகர் ராவ், நாட்டின் தண்ணீர் பிரச்னை மற்றும் விவசாயிகள் பிரச்னை குறித்து தனது கருத்துக்களை முன்வைத்தார். அதில் மாநில அரசால் தண்ணீர் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை சமாளிக்க முடியவில்லை என்று கூறினார். அவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் பல ஆறுகள் உள்ளன, ஆனால் இன்றும் […]

5 Min Read
Default Image

கேரளா வளர்ச்சி அடைந்தால் நாடே வளர்ச்சி அடையும்.! பிரதமர் மோடி உரை.!

கேரள மாநிலம் வளர்ச்சி அடைந்தால் இந்தியா வேகமாக வளரும். – கேரளாவில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கிய பின்னர் பிரதமர் மோடி பேச்சு. பிரதமர் மோடி இன்று கேரளாவில் பல்வேறு நலத்திட்டங்களை துவங்கி வைத்தார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் திட்டத்தை துவங்கி வைத்தார். அதன் பிறகு இந்தியாவிலேயே முதன் முதலாக கொச்சி நகரின் அருகே உள்ள 11 தீவுகளை இணைக்கும் வண்ணம் மெட்ரோ கடல் போக்குவரத்து சேவையை […]

3 Min Read
Default Image

பரபரக்கும் கர்நாடக சட்டசபை தேர்தல்.. நாளை முதல் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் தீவிர பிரச்சாரம்.!

நாளை கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள உள்ளார். கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் எல்லாம் முடிந்து, தற்போது பிரதான கட்சிகள் பிரச்சாரத்தில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரசும் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, […]

4 Min Read
Default Image