புதுக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி…!
புதுக்கோட்டையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் நிதியுதவி அறிவித்துள்ளார். புதுக்கோட்டையில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா, இச்சிக்காமாலைப்பட்டியைச் சேர்ந்த திரு.ஜெயந்த் என்பவர் கலந்து கொண்ட நிலையில், அவர் மாடு முட்டி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, மாடு முட்டி உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் […]