விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் முதல்வர் கலந்துரையாடல்..!

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் 3 மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். அங்கு, அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதனை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, அரசு மறுவாழ்வு இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்து, அங்கு இருந்த தொழு நோய் மையத்தில் இருப்பவர்களின் நிறைகுறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்
பின் முதல்வர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் 3 மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்ட விவசாய சங்கப் பிரதிநிதிகள் உடன் முதல்வர் கலந்துரையாடி அவர்களது நிறைகுறைகளை கேட்டு அறிந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025