என் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்.! அதிமுக விவகாரம் தொடர்பாக சசிகலா உச்சநீதிமன்றத்தில் மனு.!

சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு எதிராக செம்மலை தாக்கல் செய்த மனுவை விசாரிக்கையில் தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என கேவியேட் மனுவை சசிகலா தாக்கல் செய்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் 2017இல் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அதிமுக கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை அளித்து இருந்தார். சசிகலா மேல்முறையீட்டு மனுவை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தரப்பில் இருந்து உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சர் செம்மலை தாக்கல் செய்த மனுவை விசாரிக்கையில் தனது தரப்பு வாதத்தையும் விசாரிக்க வேண்டும் என சசிகலா தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியேட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!
July 8, 2025
“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!
July 8, 2025